Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜெயக்குமாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது...?'- சீறும் அ.தி.மு.க எம்.எல்.ஏ!

தங்க தமிழ்ச்செல்வன்

'தினகரனை ஒதுக்க நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எதன் அடிப்படையில் அவர் இப்படிப்பட்ட திடீர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்' என்று ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், சில நாள்களுக்கு முன்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவித்து பல அ.தி.மு.க எம்.எல்.ஏ. க்கள் சென்னை அடையாறில் இருக்கும் அவரது வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர். 

தினகரனுக்குப் பெருகும் ஆதரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது தங்க தமிழ்ச்செல்வன், 'தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும்  எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இதோடு நின்று விடாது. இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தருவர்' என்று கூறியுள்ளார். இதுவரை தினகரனுக்கு ஆதரவாக 24 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வந்துள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement