Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.டி.வி.தினகரனின் ரிஎன்ட்ரி ட்வீட்.. வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!

”எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணைக் கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு பதிவிட்டுவிட்டு ட்விட்டருக்கு குட் பை சொன்ன டி.டி.வி.தினகரன் தற்போது புதிய தெம்புடன் மீண்டும் பதிவிடத் தொடங்கிவிட்டார்.
 

Dinakaran
 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டார். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரைக் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி போலீஸார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர். ஜூன் 1 ஆம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

சிறையிலிருந்து தினகரன் வெளியேவந்ததுமே தமிழக அரசியலில் புயல் அடிக்கத் தொடங்கிவிட்டது. சிறை செல்வதற்கு முன்னர் அ.தி.மு.க-விலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார் தினகரன். ஆனால் சிறையிலிருந்து வந்ததும் கட்சியிலிருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அணியைக் கலங்கடித்துள்ளார். 

அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டும் என்றால் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் கட்சியை விட்டு விலகவேண்டும் என்னும் முக்கிய நிபந்தனையை ஓ.பன்னீர்செல்வம் அணி முன்வைத்தது. தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று எடப்பாடி தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் என்னைக் கட்சியிலிருந்து விலக்கிவைக்க யாருக்கும் அதிகாரமில்லை என்று தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இது எடப்பாடி அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

 


இந்தச் சூழலை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்க ட்விட்டரில் ரிஎன்ட்ரி கொடுத்துள்ளார் தினகரன். ”அனைவருக்கும் வணக்கம். மீண்டும் உங்களை இந்தத் தளத்தில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவு செய்துள்ளார் தினகரன். அந்தப் பதிவுக்குத் தமிழக நெட்டிசன்ஸ் செய்துள்ள ரிப்ளைஸ் இன்னும் சுவாரஸ்யம். பெரும்பாலும் திட்டித்தீர்க்கும் ரிப்ளைதான்!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement