Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2018 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

பொது

பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் மாறியதற்கு பின்னர் பல அதிரடி அறிவிப்புகள் வெளிவந்த வண்னம் இருக்கின்றன. ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வில் ரேங்க் முறை ரத்து, 11-ம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. மேலும் தேர்வு நேரமும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

இதனிடையே 2018-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 16ல் தொடங்கி ஏப்ரல் 20ல் நிறைவடைகிறது. இதன் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியிடப்படும். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடைகிறது. இதன் முடிவுகள் மே 30-ம் தேதி வெளியாகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1ல் தொடங்கி ஏப்ரல் 6ல் நிறைவடைகிறது. இதன் முடிவுகள் மே 16-ம் தேதி வெளியாகிறது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement