Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொடநாடு காவலாளி கொலை... முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்!

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயானை, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சயான்

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி எனத் தேடப்பட்டு வருவதாகச்  சொல்லப்பட்ட  சயான் என்பவர் ஏப்ரல் 29-ம் தேதி பாலக்காடு அருகே விபத்தில் சிக்கினார்.  இதில், சயானின் மனைவி மற்றும் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சயான் படுகாயமடைந்தார். மேலும் சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜும், ஏப்ரல் 28-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். 

இந்நிலையில் சயானுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சயான், இன்று தான் டிஸ்சார்ஜ் ஆகி கோத்தகிரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement