வெளியிடப்பட்ட நேரம்: 23:24 (06/06/2017)

கடைசி தொடர்பு:23:24 (06/06/2017)

அந்நிய செலாவணி மோசடி... சுதாகரன் வருகை ரத்து!

 

சுதாகரன்

 தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கருவிகள் வாங்கியதில் அந்நிய செலாவனி மோசடி நடைபெற்றதாக சசிகலாவின் உறவினர்கள் பாஸ்கரன், சுதாகரன் உள்ளிடோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெங்களூரு சிறையில் இருக்கும் சுதாகரனை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர், நாளை ஆஜர்படுத்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு காரணமாக சுதாகரனை சென்னை அழைத்து வருவதில் சிக்கர் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரை நாளை சென்னைக்கு அழைத்து வர முடியாது என்றும் பெங்களூரு சிறைத்துறை டிஐஜி சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.