வெளியிடப்பட்ட நேரம்: 00:48 (07/06/2017)

கடைசி தொடர்பு:10:56 (07/06/2017)

பேப்பர் படிக்கும் கருணாநிதி... வைரலாகும் புகைப்படம்..!

உடல்நலக்குறைவு காரணமாக, தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Karunanidhi


இதன் காரணமாக அவர் ஓய்வெடுத்துவருகிறார். இதற்கிடையே, கருணாநிதி பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைர விழா நிகழ்ச்சி, கடந்த வாரம் நடந்தது. இதற்காக ராகுல் காந்தி, நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் சென்னை வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கருணாநிதியைச் சந்தித்துச்சென்றனர்.


இந்நிலையில், கருணாநிதி பேப்பர் படிப்பது போன்ற படம் ஒன்று வெளியாகியுள்ளது. வைர விழா செய்தியை கருணாநிதி படிப்பதாகக் கூறப்படுகிறது. கருணாநிதி மீண்டு வர வேண்டும் என்று தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேண்டி வரும் நிலையில், இந்தப் படம் தொண்டர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதமாக வெளியாகியுள்ளது.