Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க-வினரை கிண்டல்செய்யும் சசிகலா புஷ்பா..!

அ.தி.மு.க, முதல்வர் பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் தினகரன் அணி என மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு அணியிலும் இருக்கும் அ.தி.மு.க-வினர் மாற்று அணியினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகின்றனர். எடப்பாடி அணியின் நிதி அமைச்சர் ஜெயக்குமார், 'தினகரனை ஒதுக்கி வைத்தது ஒதுக்கிவைத்ததுதான். நாங்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து எடுத்த முடிவு அது. அதில் உறுதியோடு இருக்கிறோம்.' என்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

Sasikala Pushpa

மறுபுறம், தினகரன் ஆதரவு எம்எல்ஏ., தங்க தமிழ்ச்செல்வன், 'ஜெயக்குமார் இப்படி பேசுவதற்கு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுக்கிறார். ஓ.பி.எஸ் அணியின் மைத்ரேயனோ, 'ஆட்சியைப் பிடிப்பதற்கு தினகரன் அணிக்கும் பழனிசாமி அணிக்கும் அதர்ம யுத்தம் நடந்துவருகிறது' என்று புலம்பிவருகிறார். 


இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்யசபா எம்பி., சசிகலா புஷ்பா, " டி.டி.வி.தினகரன் தான் அ.தி.மு.க-வுக்கு தலைமை என்பதும், அமைச்சர்கள் அவரை தகுதி நீக்கம் செய்துவிட்டதாகக் கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. வெளியிலிருந்து பார்ப்பவர்கள், தமிழகத்தில் நடப்பவற்றை காமெடியாகப் பார்க்கிறார்கள். நான்காண்டுஆட்சியையும் பதவியையும் தக்கவைக்க சின்னம்மா என்றவர்கள், அவர் சிறை சென்றவுடன் தூக்கிப் போட்டனர். தான்தான் எல்லாம் என்று தினகரன் கூறுவது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பதையே காட்டுகி்றது. செயலற்ற அரசாகவே தமிழக அரசு உள்ளது" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement