Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவா? : மாஃபா பாண்டியராஜன் விளக்கம்..!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவரும் அ.தி.மு.க., மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டத்துக்குத்  தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏ-க்கள் உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அரசியல் பிரவேச அறிவிப்பால், எடப்பாடி அரசு தள்ளாடத் தொடங்கியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரையில் 25 எம்எல்ஏ-க்கள் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். 


முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  97 எம்எல்ஏ-க்களும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு 12 எம்எல்ஏ-க்களின் ஆதரவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் மீண்டும் அரசியல் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. 


இந்நிலையில், ஓ.பி.எஸ். அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், வேறு ஒருவரின் ட்வீட்டை, ரீ-ட்வீட் செய்துள்ளார். அதில், "ஆட்சிக்கு பங்கம் வந்தால், பாண்டியராஜன் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூட இவர்கள் பக்கம்            ( ஈ.பி.எஸ்) வாக்களிப்பார்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

 


இதுகுறித்து திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாஃபா பாண்டியராஜன், "பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலை வந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement