Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடக்குமா? : என்ன சொல்கிறது தேர்தல் ஆணையம்?

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பணப்பட்டுவாடா விவகாரத்தால், தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. விதிகளின்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவி காலியானால், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். 

ECI


 இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பணப்பட்டுவாடா பிரச்னையால், இடைதேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.


151ஏ சட்டப் பிரிவின் படி, ஆறு மாதங்களுக்குள் இடைதேர்தல் நடத்த வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதிகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்  அறிக்கை தாக்கல்செய்யக் கூறினோம். அவர் தாக்கல்செய்த அறிக்கையில், 'தற்போது வரை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை' என்று கூறியுள்ளார்.


இதையடுத்து, மத்திய சட்ட அமைச்சகத்திடம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளோம். அங்கு, நேர்மையாக தேர்தல் நடத்துவதற்கான சூழல் வந்தபிறகே இடைத்தேர்தல் நடத்தப்படும்" என்று கூறியுள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement