Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒருநாள் படிப்பில் ஓராயிரம் வண்ணத்துப்பூச்சிகளைத் தெரிந்துகொள்ளலாம்! தமிழகத்தில் இது முதன்முறை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் அருகே, 27 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளது. சுமார் 300 வகையான தாவரங்கள், 70-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகள், அதற்குண்டான விளக்கப்படங்களையும் இங்கு காணமுடியும் என்பதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக விளங்குகிறது  இந்தப் பூங்கா.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. சிறப்பு முயற்சியாக, திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில், வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஒருநாள் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் என்.சதீஷ்  கூறுகையில், ''வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிந்துவரும் நிலையில், பார்வையாளர்கள் பயன்பெறும் வகையில் ஒருநாள் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூபாய் 100 பயிற்சிக் கட்டணத்தில் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வகுப்புகள் மாதந்தோறும் 1ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணிவரை பூங்காவிலேயே நடைபெறும். விருப்பமுள்ளோர் tbctrichy@gmail.com மற்றும் 7402623956, 9442519469  ஆகிய தொடர்பு எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வண்ணத்துப்பூச்சி வகைகள்குறித்த ஒருநாள் சான்றிதழ் படிப்பு, தமிழகத்திலேயே முதன்முதலாக திருச்சியில்தான்  தொடங்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள்குறித்த அறிமுகம், இலவச புத்தகம், கண்டறியும் முறை, பழக்க வழக்கங்கள், பல்லுயிர்ப் பாதுகாப்பில் இவற்றின் பங்கு, பாதுகாப்பு, வசிக்க ஏதுவான சூழல்குறித்து பயிற்சியில் விளக்கப்படும்.

தொகுப்பு:

ரா.நிரஞ்சனா 

படங்கள்:

மு.சாருமதி (மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement