Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செங்கல்பட்டு அருகே மின்சார ரயில் தடம் புரண்டது!

செங்கல்பட்டு அருகே மின்சார ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.

மின்சார ரயில் தடம் புரண்டது

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டதால் அந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருமால்பூரிலிருந்து  சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலின் ஒரு பெட்டி செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், ரயில் தடம் புரண்டதால், அந்த வழியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ரயில் போக்குவரத்து சீரமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement