விடுதிக்கு வந்த மாணவிகளுக்கு அதிர்ச்சி! நடுரோட்டில் நிற்க வைக்கப்பட்ட அவலம்

பள்ளிகள் திறக்கப்பட்ட இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பள்ளிக்குச்  செல்ல முடியாமல் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட சம்பவம் மதுரையில் பார்ப்போரை கலங்க வைத்தது.

பள்ளி

மதுரை காந்தி மியூசியம் அருகில் அன்னை சத்யா பெண் குழந்தைகள் விடுதி இயங்கி வருகிறது. மாவட்ட ஆட்சியரின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இந்த விடுதியில் கிராமங்களைச் சேர்ந்த ஏழைப் பெண் பிள்ளைகள் தங்கியிருந்து பள்ளிகளுக்குச் சென்று வருகிறார்கள். இந்த நிலையில்  இன்று விடுமுறைக்கு ஊருக்கு போய்விட்டு விடுதிக்கு திரும்பிய பிள்ளைகளை இங்கு அனுமதிக்க முடியாது, 35 மாணவிகளுக்கு மட்டும்தான் அனுமதி என்று இதன் பொறுப்பாளர் பொறுப்பில்லாமல் பேசியுள்ளார். இதனால் என்ன செய்வது எங்கே போவதென்று தெரியாமல் பெட்டி படுக்கைகளுடன் கிராமத்திலிருந்து வந்த மாணவிகளும் அவர்களின் பாதுகாவலர்களும் காலையிலிருந்து விடுதி வாசலிலேயே  நின்றுள்ளனர்.

இத்தகவல் ஊடகங்களுக்கு தெரிய வர, அதன்பின் சமூக ஆர்வலர்கள் செல்வகோமதி, குழந்தைகள் நல ஆலோசகர் ராணி சக்கரவர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து விடுதி பொறுப்பாளர்களிடம் விசாரித்தனர். அதிகமான பிள்ளைகள் தங்கியிருக்கும் அளவுக்கு விடுதி வசதியில்லை, மீறி தங்க வைத்தால் நீதிமன்றம் கண்டிக்கும் என்று கூறியுள்ளார்கள். ஆனால், நீதிமன்ற உத்தரவு வந்து ஆறு மாதமாகியும், மாற்று ஏற்பாடு செய்யாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளார்கள். அதைப்பற்றி குழந்தைகளுக்கு எந்தத் தகவலும் கூறாமல் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட  அனைத்து மாணவிகளையும் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து கலெக்டரிடம் முறையிட்டுள்ளார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!