கன்னியாகுமரியில் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது கல்வீச்சு!

கன்னியாகுமரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால், அங்கு பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

cpm

நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, செய்தியாளர்கள் சந்திப்பின்போது தாக்கப்பட்டார். ஹிந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர்கள், யெச்சூரியைத் தாக்க முயன்ற குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் நேற்று பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனிடையே, கன்னியாகுமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது. மேலும் மேல்புறத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகத்திலிருந்த கட்சி நிர்வாகிகளின் நினைவு ஸ்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறை விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில், கேரளாவில் பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று திருவனந்தபுரத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!