காஞ்சிபுரம் அருகே விபத்து... 15 பேர் படுகாயம்! | Accident near Kanchipuram, 20 injured

வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (08/06/2017)

கடைசி தொடர்பு:09:32 (08/06/2017)

காஞ்சிபுரம் அருகே விபத்து... 15 பேர் படுகாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

kanchi

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே தொடர்ந்து விபத்துகள் நடந்துவருகின்றன. பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், ஒரகடம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும்  தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், சுமார் பதினைந்து பேர் லேசான காயமுற்றனர். காயமுற்றவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 4.45-க்கு நடைபெற்ற இந்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி தேசிய  நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணி நேரம் நின்றன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க