வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (08/06/2017)

கடைசி தொடர்பு:15:54 (08/06/2017)

பாலில் சோப்பு ஆயில்! அதிர்ச்சியில் மதுரை மக்கள்!

தனியார் பாலில் கலப்படம்செய்யப்படுவதாக தமிழகத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் பாலில் கலப்படம்குறித்து ஆராய, மதுரை ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் பால் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 

milk contamination

 

மதுரை மாவட்டம் முழுவதும் ஐந்து கட்டங்களில் பால் தரபரிசோதனை 28 குழுவின் தலைமையில் நடந்துவருகிறது . அதில் மதுரை மாநகருக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 108 மாதிரிகள்  இன்று முதல் கட்டமாக எடுத்துவரப்பட்டு கோ.புதூர் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது . அதில் மதுரை கோச்சடை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தனியார் பால் மாதிரியில் சோப்பு ஆயில் கலந்திருப்பது இயந்திரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து அந்த பாலை முழு ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கையை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் . அதன் தலைமை பொறுப்பினை ரமேஷ் என்ற அதிகாரி மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.

milk contamination

அதிகநுறை வருவதற்காக பாலில் சோப்பு ஆயில் கலந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி, மதுரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்திசேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘தனியார் பால் நிறுவனங்கள் இதுபோன்று கலப்படம் செய்வது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க