பா.ஜ.க என்ன தீண்டத்தகாத கட்சியா.... அ.தி.மு.க அமைச்சர் ஆவேசம்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு அ.தி.மு.க ஆதரவளித்தால் என்ன தவறு என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

rajendra balaji
 

சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். வருகிற குடியரசுத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக அ.தி.மு.க செயல்படுமா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி ‘பா.ஜ.கவுக்கு ஏன் ஆதரவளிக்கக் கூடாது. பா.ஜ.க என்ன தீண்டத்தகாத கட்சியா? மத்திய அரசு எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிலர் கூறி வருகின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை... மிரட்டவில்லை.. யாராலும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. யாராலும் எங்களைப் பணிய வைக்க முடியாது' என்றார் ஆவேசமாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!