'ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி-க்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும்' - இல. கணேசன் | Admk will support Bjp in President Election, Says Ila Ganesan

வெளியிடப்பட்ட நேரம்: 04:34 (09/06/2017)

கடைசி தொடர்பு:08:05 (09/06/2017)

'ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி-க்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும்' - இல. கணேசன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு,  அ.தி.மு.க-வில் நிலவிவரும் மோதலுக்கு இன்னும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி தினகரன் அணி என்று மூன்று அணிகளாக செயல்பட்டுவருகிறது.

Ila Ganesan


இந்தச் சம்பவங்களுக்கு, பி.ஜே.பிதான் காரணம் என்று கூறப்பட்டுவருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் இரு அணிகளுமே ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவளிப்பார்கள் என்று கூறப்பட்டுவருகிறது.  


இந்நிலையில், திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோயிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பி.ஜே.பி எம்பி., இல.கணேசன் கலந்துகொண்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம், "ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரைப் பிரதமர் விரைவில் அறிவிப்பார்.


ஜனாதிபதி தேர்தலில், பி.ஜே.பி-க்கு, அ.தி.மு.க ஆதரவளிக்கும். தமிழகத்தில், தி.மு.க-வை எதிர்க்கும் சக்தி அ.தி.மு.க-வுக்கு இல்லை. தி.மு.க-வை எதிர்க்கும் சக்தி, பி.ஜே.பி-க்குதான் உள்ளது. வைரவிழாவில் கூட அ.தி.மு.க-வை விட, பி.ஜே.பியைத்தான் அதிகம் விமர்சித்தனர். யெச்சூரி மீதான தாக்குதலுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறினார்.