Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியைத் தொடர்ந்து சென்னை..! அதிரவைக்கும் அய்யாக்கண்ணு போராட்டம்

சென்னை சேப்பாக்கத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அய்யாக்கண்ணு

வறட்சி நிவாரணம், விவசாயிகள் வங்கிக் கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 41 நாள்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த அய்யாக்கண்ணு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பையொட்டி போராட்டத்தைக் கைவிட்டார். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம், கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர், தமிழக முதல்வரைச் சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர். இவ்வாறு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தாலும், அவர்களின் கோரிக்கை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என மீண்டும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். 

சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தப்படும் என முன்னரே அறிவித்திருந்தபடி விவசாயிகளின் தொடர் போராட்டம் துவங்கியுள்ளது. இன்று காலை சேப்பாக்கத்தில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement