வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (09/06/2017)

கடைசி தொடர்பு:14:06 (09/06/2017)

இலங்கைக் கடற்படைத் தாக்குதல்: மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டது சென்னை உயர்நீதிமன்றம்..!

தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது வழக்கமான செய்தியாகிவிட்டது. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது விஸ்வரூபம் எடுப்பதுண்டு. இந்நிலையில், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், '1984 ஆம்  ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை 374 பேர் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்' என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், 'இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஜூலை 17 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.