தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கைது! மு.க.ஸ்டாலின் ஆவேசம்

புதுக்கோட்டையில் 3 தி.மு.க எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஜூன் 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின்

புதுக்கோட்டையில் ரூ.232 கோடி செலவில் கட்டப்பட்ட, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த அரசு விழாவுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. விழாவுக்கான விளம்பரங்களிலும் இவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தன.

இதனிடையே விழாவுக்கு புறப்பட்டவர்களை 'விழாவில் பங்கேற்க வேண்டாம்' என காவல்துறையினர் தடுத்தனர். இதையடுத்து காவல் துறையினரை மீறி விழாவுக்கு புறப்பட்ட 3 எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்துள்ள அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜூன் 11 ஆம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!