ஏடிஎம்மில் கள்ளநோட்டு... கண்டுகொள்ளாத வங்கி... கலெக்டரிடம் தம்பதி புகார்

மதுரையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கள்ளநோட்டு வந்ததைப் பற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை

கடந்த நவம்பரில் பிரதமர் மோடி பணமதிப்பிழக்கத்தைக் கொண்டு வந்தபோது, இந்த அறிவிப்பின் மூலம் கள்ளநோட்டு ஒழிக்கப்படும் என கூறினார். ஆனால் புதிதாக அச்சடிக்கப்பட்ட நோட்டுகளே, அடுத்த சில நாள்களில் புழங்க ஆரம்பித்தது. மேலும் வங்கி ஏ.டி.எம்களிலும் கள்ளநோட்டு வருவதாக பல்வேறு மாநிலங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, கடந்த ஜூன் 1 ஆம் தேதி மதுரையைச் சேர்ந்த முகமது என்பவர் அங்குள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது 2000 ரூபாய் கள்ளநோட்டு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முகமது, வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். மேலும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று மதுரை ஆட்சியர் வீர ராகவராவிடம் புகார் அளித்தார், முகமது. கள்ளநோட்டு பணமாக வந்த 2000 ரூபாயை பெற்றுத் தருமாறு புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!