Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி... 17 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி

மதுரையில் 17 வயது சிறுமி காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

தற்கொலை

மேலூர் கொட்டகுடி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி புவனா (பெயர் மாற்றம்). அவருக்கு தனது வீட்டருகே உள்ள தனது நண்பர் ஒருவரோடு காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார் புவனா . அவருக்கு திருமண வயது குறைவு என்பதால் அது தொடர்பாக மறைமுக புகார் வந்துள்ளது . இந்நிலையில் மேலூர் மகளிர் காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

 அப்போது மனம் உடைந்த அந்த சிறுமி கழிப்பறைக்கு செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு, மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார். அதனால் அவரது இரு கால்களும் உடைந்தது, அதனைத் தொடர்ந்து மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் . 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement