வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (09/06/2017)

கடைசி தொடர்பு:19:22 (09/06/2017)

மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்ட ம.தி.மு.கவினர்!

வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்ததைக் கண்டித்து சென்னை மலேசிய தூதரகம் முன் ம.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

vaiko
 

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில், வைகோவின் பெயரும் இருப்பதால்தான் இந்த தடை நடவடிக்கை என்று மலேசியா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்றிரவு, விமானத்தில் அவர் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்புகொண்டிருந்ததாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன்பாக ம.தி.மு.க ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க