மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.. வைகோவுக்காக களமிறங்கும் விஜயகாந்த்!

ம.தி.மு.க பொதுச் செயலாளர்  வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

vaiko

மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில், வைகோவின் பெயரும் இருப்பதால் மலேசியாவுக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகோவை விமான நிலையத்திலேயே மலேசிய அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர். இன்றிரவு, விமானத்தில் வைகோ சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார். விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்புகொண்டிருந்ததாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜயகாந்த் ‘ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளது என்றால் அவருக்கு மலேசியா எப்படி விசா தந்தது? விசா கொடுத்தாலே நாட்டுக்குள் அனுமதிப்பதற்குச் சமம். எனவே மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு வைகோவை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!