வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (09/06/2017)

கடைசி தொடர்பு:22:15 (09/06/2017)

'விரைவில் தமிழகம் காவிமயமாகும்'... தமிழிசை தகவல்!

இந்தியா 60 சதவிகிதம் காவி மயமாகிவிட்டது, விரைவில் தமிழகமும் காவி மயமாகும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

bjp

இன்று சென்னை அண்ணாநகரில் பா.ஜ.க ஆட்சியின் மூன்றாண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதனிடையே பொதுகூட்டத்தில் பேசிய தமிழிசை, 'தமிழகத்தில் பா.ஜ.க புறவாசல் வழியாக வரவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. விரைவில் பெரியளவில் பா.ஜ.க காலூன்றும்' என கூறியுள்ளார்.

'இந்தியா 60 சதவிகிதம் காவி மயமாகிவிட்டது. விரைவில் தமிழகமும் காவி மயமாகும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'பா.ஜ.கவை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என்று கூறும் கழக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனிடையே பொது கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க வளர்ந்துவிட்டது. தமிழகம் மட்டும் தான் ஒரே பிரச்னையாக உள்ளது. இங்கு தான் பா.ஜ.கவுக்கு ஒரே ஒரு அமைச்சர் மட்டும் இருக்கிறார்' எனக் கூறியுள்ளார்.