Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் குடும்ப பிரச்னைகளை வெளியே பேசுவீர்களா?.. நிருபர்களை கேள்விகேட்ட முதல்வர்!

கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘தமிழக அரசு சிறப்பான ஆட்சி செய்து வருகிறது.  தென்னை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தென்னை மரத்தில் இருந்து 'நீரா' பானம் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசே மணல் குவாரிகளை அமைத்து மக்களுக்கு குறைந்த விலையில் மணல் வழங்கி வருகிறது. நீர் ஆதாரங்களை தூர்வாரி வருகிறது' என்றார்.

Edappadi Palanisamy
 

விவசாயிகள் பிரச்னை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த முதல்வர் ‘விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது’ என்றார்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடந்து வருவது பினாமி ஆட்சி என்று கருத்து தெரிவித்திருந்தார். அதுகுறித்து பேசிய முதல்வர் ‘ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார். அவர் நேரத்திற்கு நேரம் கருத்தை மாற்றிக் கொள்கிறார். இது பினாமி அரசு இல்லை. விவசாயிகளுக்கான அரசு’ என்றார். 

மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்க மறுத்த முதல்வர் ‘அது எங்கள் உட்கட்சி விவகாரம். அதை ஊடகத்திடனம் கூற முடியாது. உங்கள் குடும்ப பிரச்னைகள் குறித்து பொதுவெளியில் பேசுவீர்களா? அப்படிதான் இதுவும். இது எங்கள் உட்கட்சி விவகாரம்’ என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement