முதல்வர் பங்கேற்ற அரசு விழா.. புறக்கணித்த முன்னாள் அமைச்சர்!

thoppu

ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்குபெற்ற மேம்பால அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ஈரோடு அரசு மருத்துவமனை அருகே 58.54 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை வெகுவிமரிசையாக அடிக்கல் நாட்டுவிழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் தமிழக அரசின் முக்கிய அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவை, பெருந்துறை எம்.எல்.ஏவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் புறக்கணித்தார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான தோப்பு வெங்கடாசலம், சமீபமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!