வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (11/06/2017)

கடைசி தொடர்பு:11:05 (11/06/2017)

போயஸ் கார்டன் ஜெ., வீட்டுக்கு விரைந்த தீபா..!

deepa

போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு ஜெ.தீபா வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனிப்பேரவை தொடங்கி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான 'வேதா இல்லம்' தனக்குதான் சொந்தம் என தீபா கூறிவந்தார். இந்நிலையில், இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தார் தீபா. ஆனால், அங்கிருந்த தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் தீபாவை உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், 'தினகரன் ஆதரவாளர்கள் தங்களை 'வேதா இல்ல'த்துக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். எங்களை உள்ளே செல்லவிடாமல் அவர்கள் தடுக்கின்றனர்', என தீபா ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இதுகுறித்து பேட்டியளித்த தீபா, 'என் சகோதரர் தீபக் அழைத்ததாலேயே போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தேன். ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்வதற்காக தீபக்தான் என்னை அழைத்தார்', என கூறியுள்ளார். போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.