ஜெ., வீட்டு வாசலில் காத்திருக்கும் தீபா.. கணவர் மாதவனும் வந்ததால் பரபரப்பு!

madhavan

இன்று காலை திடீரென ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தார் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா. தினகரன் ஆதரவாளர்கள் தங்களை உள்ளே விட மறுக்கின்றனர் என தீபா ஆதரவாளர்கள் புகார் கூறினர். மேலும், இதுகுறித்து பேட்டியளித்த தீபா, 'என் சகோதரர் தீபக் அழைத்ததாலேயே போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தேன். ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்வதற்காக தீபக்தான் என்னை அழைத்தார். அவர் உள்ளேதான் இருக்கிறார். அவரை வெளியே வரச்சொல்லுங்கள்.. நான் இங்கிருந்து செல்கிறேன்', என கூறியுள்ளார். உடனடியாக போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

deepa

செய்தியாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், போயஸ் கார்டன் பகுதிக்கு வந்தார் தீபாவின் கணவர் மாதவன். தீபாவுடன் ஏற்பட்ட பிரச்னையால் தனிக்கட்சி தொடங்கிஇருந்தார் இவர். இந்நிலையில், இன்று காலை தீபா போயஸ் கார்டன் வந்த விவரம் தெரிந்து மாதவனும் அங்கு வந்துசேர்ந்தார். இருபிரிவினரின் ஆதரவாளர்கள் அங்கு குவிந்ததால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தனியார் தொலைகாட்சி ஒன்றின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை, போயஸ் கார்டன் இல்லத்தில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த பாதுகாவலர்கள் தாக்கியதால் பிரச்னை வெடித்துள்ளது. போயஸ் கார்டன் வேதா இல்லத்தின் வாயிலிலேயே தீபா காத்துக்கொண்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!