வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (11/06/2017)

கடைசி தொடர்பு:13:22 (11/06/2017)

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை - மு.க.ஸ்டாலின் கடிதம்..!

ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 


ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் ஜூன் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில், தி.மு.க செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'சட்ட சபை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. தமிழர்கள் சுய மரியாதையுடன் வாழ நிச்சயம் அரசியல் தீர்வு தேவை. இனப்படுகொலை தொடர்பான விவகாரத்தில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை தேவை. அரசியல் ரீதியில் தீர்வு ஏற்பட பொதுவாக்கெடுப்பால் மட்டுமே முடியும். ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டுக் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.