வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (11/06/2017)

கடைசி தொடர்பு:14:18 (11/06/2017)

ஜி.எஸ்.டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயகுமாரின் கோரிக்கைகள் இதுதான்..!

தண்ணீர் கேன்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு வரி விலக்கு தேவை என்று ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதிஅமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கைவிடுத்துள்ளார். 


பொருள்களுக்கு வரி நிர்ணயம் செய்வது தொடர்பான ஜி.எஸ்.டி கூட்டம் மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது 16-வது ஜி.எஸ்.டி கூட்டமாகும். இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் நிதிஅமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், 'பொழுதுபோக்கு அம்சங்களுக்கு 12% வரி விதிக்கப்படவேண்டும். உள்ளூர் சினிமாக்களுக்கு குறைந்தபட்ச வரி வேண்டும். மசாலா பொடிகள், பீடிகள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச வரி வேண்டும். தண்ணீர் கேன்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு வரி விலக்கு வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.