வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (11/06/2017)

கடைசி தொடர்பு:15:25 (11/06/2017)

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் - தமிழிசை சௌந்தர்ராஜன் சவால்

தமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், 'உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், அ.தி.மு.க.,வை பா.ஜ.க இயக்குவதாக ஸ்டாலின் கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லாதது. பினாமி அரசு என கூறுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.,வில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர்.

அ.தி.மு.க ஆட்சி நீடிப்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கையில்தான் உள்ளது. தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க.வை எதிர்ப்பதை விட பி.ஜே.பி.யை தான் அதிகம் எதிர்க்கிறார். விவசாயிகள் பிரச்னை குறித்து கருத்து கூற ராகுல் காந்திக்கு தகுதி இல்லை. பா.ஜ.க ஒன்றுமே செய்யவில்லை என கூறும் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் வளர்ச்சி கூட்டங்களுக்கு வர வேண்டும். அவர்களுக்கு முன் வரிசையில் இருக்கை வழங்கப்படும். அங்கு வந்து அமர்ந்து  பார்த்துவிட்டு கருத்து கூற வேண்டும்.தமிழகத்தில் அரசு அதிகாரிகள் நேர்மையாக இருப்பதே சாதனையாக உள்ளது என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க