எந்தெந்த பொருள்களுக்கு எத்தனை சதவிகித ஜி.எஸ்.டி வரி: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..! | GST details for varioty of goods

வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (11/06/2017)

கடைசி தொடர்பு:09:26 (12/06/2017)

எந்தெந்த பொருள்களுக்கு எத்தனை சதவிகித ஜி.எஸ்.டி வரி: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!

கருப்பட்டி, பனைவெல்லம் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக நிதிஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


டெல்லியில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது ஜி.எஸ்.டி தொடர்பாக நடைபெறும் 16-வது கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 'வர்த்தகர்கள், தொழில்முனைவோர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கைகள் வரைமுறைப்படுத்தப்பட்டு அந்தக் கோரிக்கைகள் ஜி.எஸ்.டி கூட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டன. அதில் சில கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.

கருப்பட்டி, பனைவெல்லத்துக்கு வரி விதிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஊறுகாய்களுக்கு 18 சதவீத வரியிலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முந்திரிப் பருப்பு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், பனியன், ஜட்டிகள் போன்ற உள்ளாடைகளுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. டிராக்டர் சம்பந்தமான பொருள்கள் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைப்பு. ப்ராண்டட் இல்லாத ஆடைகள் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.