Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய கைதிகள்!

கைதிகள்

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான சஞ்சாலக்குடாவில் உள்ள பெட்ரோல் நிலையம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இது முழுக்க முழுக்க ஆயுள் தண்டனை பெற்றக் கைதிகளால் நடத்தப்படுகிறது. இதில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க செய்தி, அந்த பெட்ரோல் நிலையம் நான்கு கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இந்த லாபத்தொகை சிறைத்துறை வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்க் ஊழியர்களாக 45 தண்டனைக் கைதிகளும், பெயிலில் உள்ள 15 சிறைவாசிகள் மற்றும் முன்னாள் கைதிகள் ஆகியோர் பணியாற்றுகின்றனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களைவிட இந்த பெட்ரோல் பங்க் அதிக லாபம் ஈட்டுகிறது என்றும் இந்த லாபம் பெட்ரோல் விற்பனையின் மூலமே வந்தது என்றும், டீசலில் வந்த லாபம் கணக்கில் சேர்க்கவில்லை என சஞ்சாலகுடா சிறையின் ஜெயிலர் சைதைய்யா தெரிவித்துள்ளார். இதில் பணியாற்றும் ஊழியர்களை அவர்களின் நன்னடத்தை மற்றும் திறமையின் அடிப்படையில் சிறை அலுவலர்கள் தேர்வு செய்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். 

இதுவரை இங்குப் பணியாற்றிய எந்தக் கைதியும் வாடிக்கையாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் வரவில்லையாம். ஆனால் வாடிக்கையாளர்கள் பலமுறை கைதிகளை தாக்கியுள்ளனராம். “பணியாற்றும் கைதிகளுக்கு முழுப்பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கைதிகளிடம் கடுமையாக நடக்க முயன்ற வாடிக்கையாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்” என்று சைதைய்யா தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement