வெளியிடப்பட்ட நேரம்: 23:02 (11/06/2017)

கடைசி தொடர்பு:08:26 (12/06/2017)

காவிக் கொடியை ஏற்றியே தீருவோம்... தமிழிசை உறுதி!

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடியை ஏற்றியே தீருவோம் எனக் கூறியுள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

காவி

பா.ஜ.க விவசாய அணி சார்பில் இன்று திருச்சியில் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய தமிழிசை, 'செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடியை ஏற்றியே தீருவோம்' எனக் கூறியுள்ளார்.

மேலும், 'ஸ்டாலின் தமிழ்நாட்டில் காவி, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்கிறார். தமிழகம் பா.ஜ.க வளர தகுதியான மண் தான். கண்டிப்பாக பா.ஜ.க இங்கு காலூன்றும். காவிக் கொடியை ஊன்றியே தீரும். தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையைப் பா.ஜ.கவால் மட்டுமே மாற்ற முடியும். பா.ஜ.க இல்லாமல் தமிழகத்தை ஆளமுடியாது என்கிற நிலை உருவாக்குவோம்' எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க