Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'விரைவில் அ.தி.மு.க ஆறாக உடையும்..!'- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆரூடம்!

அ.தி.மு.க கட்சியில் தற்போது நடந்துவரும் அதிரடி மாற்றங்களால் தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. எதுவுமே நடக்காவிட்டாலும் ஏதோ ஒன்று நடப்பது போன்ற ஒரு பரபரப்பு தமிழகம் முழுவதுமே நிலவிவருகிறது. இந்நிலையில், விரைவில் அ.தி.மு.க ஆறு பிரிவுகளாக உடையும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 'அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலைதான் தற்போது இருக்கிறது. தமிழத்தில் தற்போது அரசு இயந்திரம் சுத்தமாகச் செயல்படவில்லை. மாறாக, அ.தி.மு.க-வில் தங்களுடைய இடத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே எல்லோரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

ஏற்கெனவே, அ.தி.மு.க தினகரன், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரின் கீழ் மூன்றாகப் பிரிந்திருக்கிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ் எடப்பாடி அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்பட்டது. அணிகள் இணைவதை மக்கள் விரும்பவில்லை என்று அவர் காரணம் சொல்கிறார். 

அ.தி.மு.க-வில் நாளுக்கு நாள் அரங்கேறும் காட்சிகளைப் பார்க்கும்போது, விரைவில் அ.தி.மு.க ஆறு பிரிவுகளாக உடையலாம். ஜெயலலிதா இறந்தபோது இருந்ததைவிட மிக மோசமாக ஆட்சி நடக்கிறது.' என்று ஆரூடம் சொல்கிறார், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement