வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (12/06/2017)

கடைசி தொடர்பு:15:20 (12/06/2017)

இன்டர்நேஷனல் சிம் கார்டு... பணம் ரிட்டன்- டிராய் அறிக்கை!

டிராய்

'இன்டர்நேஷனல் சிம் கார்டு' பயன்படுத்துவோர், பயணத்தின்போது மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தால், அழைப்புகள் திடீர் திடீரெனத் துண்டிக்கப்படும். இனிமேல், இணைப்புத் துண்டிக்கப்படும் வாடிக்கையாளருக்கு, அதற்கான பணத்தைச் செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.

டிராய் நிறுவனத்தால் வெளியிடப்படும் விதிகள், டெலிகாம் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால்,வெளிநாட்டுப் பயணத்தின்போது சிம் கார்டு நெட்வொர்க் வேலைசெய்யவில்லை என்றாலும்கூட நெட்வொர்க் நிறுவனங்கள் பணம் செலுத்தவேண்டியிருக்கும். இதற்காக டிராய் நிறுவனம், இன்டர்நேஷனல் சிம் கார்டு நிறுவனங்களுடன் இந்தாண்டு இறுதிக்குள் கலந்தாய்வை நடத்த இருக்கிறது. இன்டர்நேஷனல் சிம் கார்டு உபயோகப்படுத்தும் பாதிப்பேர், தங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதாக டிராய் நடத்திய சர்வேயில் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு டிராய் நிறுவனம், மொபைல் அழைப்புகள் பேசிக்கொண்டிருக்கும்போது கட்டானால், ஓர் அழைப்புக்கு ஒரு ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, அதை உச்சநீதிமன்றம் ரத்துசெய்தது குறிப்பிடத்தக்கது.