வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (12/06/2017)

கடைசி தொடர்பு:15:23 (12/06/2017)

4K கேமிங்... மைக்ரோசாஃப்டின் புதிய கேமிங் கன்சோல் இதுதான்! #XboxOneX

க்ஸ்பாக்ஸ் ஒன் X எனப் பெயரிடப்பட்டிருக்கும் புதிய கேமிங் கன்சோல்-ஐ நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த E3 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது, மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இந்த கன்சோல், இதற்கு முன்பு 'புராஜெக்ட் ஸ்கார்பியோ' என்று மட்டுமே அழைக்கப்பட்டுவந்த நிலையில், நேற்றுதான் 'Xbox One X' என்ற பெயரும் வெளியிடப்பட்டது.

XBox One X கேமிங் கன்சோல்

மைக்ரோசாஃப்டின் முந்தைய கேமிங் கன்சோல் ஆன Xbox One S-ன் மினி வெர்ஷன் போல இருக்கிறது, Xbox One X. 6 டெராஃபிளாப்ஸ் புராஸஸிங் பவர், 12 ஜி.பி GDDR5 மெமரி, 326 GB/s மெமரி பேண்ட்வித், 1 TB HDD இன்டர்னல் மெமரி ஆகியவற்றோடு 4K கிராஃபிக்ஸ் என அசத்தல் காம்போவாக அமைந்திருக்கிறது, இந்த Xbox one X. 

இதை, உலகின் சிறந்த பவர்ஃபுல் கன்சோல் என அழைக்கிறது, மைக்ரோசாஃப்ட். 499 டாலர் விலைகொண்ட Xbox One X, இந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க