தமிழக அரசியல் சூழல் இனி எங்கள் பக்கம்! தமிழிசை கலகல பேட்டி

’தமிழக அரசியல் சூழல் பா.ஜ.க பக்கம் விரைவில் திரும்பும்’ என பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழிசை

சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ‘தமிழகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களுக்கும் பா.ஜ.க -வைத்தான் தமிழக அரசியல்வாதிகள் குறைகூறிவருகின்றனர். ஆனால், இன்னும் மூன்று மாத காலங்களில் தமிழக அரசியல் சூழல் பா.ஜ.க பக்கம் திரும்பும்’ என்று கூறினார்.

மேலும், தமிழக அரசியல் நிலவரம்குறித்து தமிழிசை கூறுகையில், ‘திருச்சியில் விவசாயிகள் மாநாட்டை முடித்துவிட்டு தற்போதுதான் சென்னை திரும்பியுள்ளேன். விவசாயப் பிரச்னைகளைத் தமிழக அரசு சரியான முறையில் கையாள வேண்டும். எல்லாவற்றுக்கும் பா.ஜ.க-வைக் குறைகூறும் தமிழக அரசியல்வாதிகள், பன்னீர்செல்வம் தன் பேச்சுவார்த்தைக் குழுவைக் கலைத்ததற்கும் பா.ஜ.க -வையே குறைகூறுவார்கள் போலிருக்கிறது. தற்போது, தீபா புதிதாக ஒரு நாடகத்தை அரேங்கேற்றிவருகிறார்’ என்றார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!