Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவுக்கு வந்தது கூகுள் VR ஹெட்செட் #GoogleVR

ஸ்மார்ட்போன்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்துக்காகக் கடந்த வருடம் கூகுள் அறிமுகப்படுத்திய ஹார்ட்வேர் டிவைஸ்தான்,  Daydream View VR ஹெட்செட். இந்த ஹெட்செட் உலகெங்கும் பல நாடுகளில் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துவிட்டநிலையில், இன்று இந்தியாவிலும் அதிகாரபூர்வமாக வெளியாகியிருக்கிறது. இப்போதைக்கு இதை ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டுமே வாங்கமுடியும். 

கூகுள் VR ஹெட்செட்

முதலில் கூகுளின் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL போனில் மட்டுமே இருந்த Daydream வசதி இன்று மோட்டோ Z உள்ளிட்ட பல போன்களில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான சாம்சங் S8 மற்றும் S8+ போன்களிலும் விரைவில் இந்த வசதி வரவிருக்கிறது. எதிர்கால ஸ்மார்ட்போன்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி போன்றவற்றுக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும். அதிலொரு அங்கம்தான் இந்த VR ஹெட்செட்கள். 

கூகுள் VR ஹெட்செட்டில், உங்கள் போனை மாட்டிவிட்டால் போதும். விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவம் உங்களுக்காக ரெடி. நேர்த்தியான வடிவமைப்பு, குறைவான எடை, எளிதாக இயங்கும் ஹெட்செட் கன்ட்ரோலர் என இதை டிசைன் செய்துள்ளது கூகுள். இதன்விலை 6,999 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் Daydream VR ஹெட்செட் வீடியோ:

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement