Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூடுகிறது அமைச்சரவை...!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. 

TN Assemply

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் தினம், தினம் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி தினகரன் அணி என்று மூன்று அணிகளாகச் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் இடையே போயஸ் கார்டனில் நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது. நாளை மாலை 4.30 மணி அளவில் இந்தக் கூட்டம் நடக்கிறது. வருகின்ற 14 ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஜூலை 19 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

மொத்தம் 24 நாள்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே, பேரவைக் கூட்டத் தொடரை முன்னிட்டு நாளை அமைச்சரவை கூட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement