Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடியரசுத் தலைவர் தேர்தல்: குழுவை அமைத்தது பி.ஜே.பி!

பி.ஜே.பி தலைவர் அமித் ஷா

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த குழுவை அமைத்துள்ளது ஆளும் பாரதிய ஜனதா கட்சி.

மூன்று பேர் கொண்ட குழுவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கைய நாயுடு ஆகியோர் இடம்  பெற்றிருப்பதாக பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். இக்குழுவினர், எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி, போட்டியின்றி தேர்வு செய்ய மத்திய அரசு விரும்புகிறது. அதற்காக ஆளும் கட்சி சார்பில் இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக்கட்சிகளைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி சார்பில் முதலில் வேட்பாளரை வெளியிட வேண்டும் என்றும், அதன் பின்னரே அந்த வேட்பாளரை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி நாங்கள் முடிவு செய்வோம் என்றும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றியும் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையும் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement