வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (13/06/2017)

கடைசி தொடர்பு:07:46 (13/06/2017)

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார். இதனையடுத்து ஜூன் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

வருகிற 14 ஆம் தேதியிலிருந்து ஜூலை 19 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் 24 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத்துறைகளுக்குமான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் 4-வது அமைச்சரவைக் கூட்டமாகும்.