Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் தீ..!

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பற்றி எரியும் தீயால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து நாசமாகியுள்ளது. இரண்டாவது நாளாக தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. 

கோப்புப்படம்


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்தச் சுரங்கத்திலிருந்து மத்திய அரசின் நெய்வேலி லிக்னெட் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் நிலக்கரி எடுத்துவருகிறது. சுமார் ஒரு ஆண்டு காலமாக வெட்டி எடுக்கப்பட்ட பழுப்பு நிலக்கரி சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலக்கரி நேற்று காலையில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. தற்போது வரை தீ தொடர்ந்து எரிந்துவருகிறது. பழுப்பு நிலக்கரி என்பது எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டது என்றும் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக  நிலக்கரி தீ பிடித்து எரிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியது. இல்லையென்றால் அதுவே தீப் பற்றும் தன்மைகொண்டது. தற்போது தீப் பற்றிய நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு ஒரு ஆண்டு காலத்துக்கும் மேலாகிறது என்று கூறப்படுகிறது. இத்தகையை காரணங்களால் நிலக்கரி தீப் பற்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும், இந்த தீயை அவ்வளவு எளிதில் அணைக்க முடியாது என்றும் மாறாக மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் மட்டுமே தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து நாசாமாகியிருக்கின்றன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement