Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய பள்ளிப் பாடத்திட்டம் உருவாக்க கல்வியாளர்களுக்கு அழைப்பு!

பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் கல்வியாளர்கள் கலந்து கொள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனரகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் கூறுகையில், "1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதுதொடர்பாக 22.5.2017 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியையும், பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணியையும் மேற்கொள்ளவுள்ளது.

அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள், ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பணி செயல்படுத்தப்படவுள்ளது. இந்தப் பணியில் பங்குபெற ஆர்வமுள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்த கல்வி சீரமைப்பு அறிக்கைகளில் ஆழமான புரிதல் இருத்தல் வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் www.tnscert.org என்ற இணையதள முகவரியில் தங்களின் விவரங்களை வருகிற 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளலாம்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement