Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு! சசிகலாவை ஆஜர்படுத்த உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் வருகிற 21ஆம் தேதி சசிகலாவைக் காணொலி காட்சியின் மூலம் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பரப்பன அக்ரஹாரச் சிறையிலிருந்து வருகிறார். 1996-97 காலகட்டங்களில் வெளிநாடுகளிலிருந்து ஜெயா டிவிக்குத் தொலைத்தொடர்பு வாங்கிய வழக்கில் ஏற்கெனவே சசிகலா, திவாகரன், பாஸ்கரன் ஆகியோர்மீது அந்நியச் செலாவணி வழக்கு இருந்துவருகிறது. அமலாக்கத்துறையினர் 5 வழக்குகளில் இவர்கள்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு சுமார் 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கில் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்னர் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். சசிகலாவின் உறவினர் பாஸ்கரனும் இந்த வழக்கில் ஒருமுறை நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் சசிகலாவுக்கு முதுகுப் பகுதியில் பாதிப்பு இருப்பதால் காணொலி மூலம் பதிலளிக்க அனுமதி அளிக்கவேண்டும் என்று சசிகலா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு நீதிபதி ஜாகீர் ஹூசைன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 21 ஆம் தேதி சசிகலாவைக் காணொலியின் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்று கர்நாடக சிறைத்துறைக்கு உத்தரவிட்டார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement