வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (13/06/2017)

கடைசி தொடர்பு:15:11 (13/06/2017)

சேகர் ரெட்டியின் 68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

தொழிலதிபர் சேகர்ரெட்டிக்குச் சொந்தமான 68 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டிலிருந்து சட்டவிரோதமாகப் பதுக்கிவைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடமிருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரையிலான பணமும் சுமார் 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சேகர்ரெட்டி, அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து சேகர் ரெட்டியின் சொத்துகளை முடக்கும் பணியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் சேகர்ரெட்டிக்குச் சொந்தமான 68 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.