வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (13/06/2017)

கடைசி தொடர்பு:16:37 (13/06/2017)

வண்ணமயமான செயற்கை மேகத்தை உருவாக்குகிறது நாசா!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இன்று வண்ணமயமான மேகத்தைச் செயற்கையாக உருவாக்க இருக்கிறது. அயனி மண்டலம் மற்றும் அரோரா ஒளி தொடர்பான ஆய்வுக்காக, இந்தச் செயற்கை மேகம் உருவாக்கப்படவிருக்கிறது.

வண்ணமயமான மேகத்தை உருவாக்கவிருக்கும் நாசா

வர்ஜீனியா மாகாணத்திலுள்ள நாசாவுக்குச் சொந்தமான வால்லப் ஏவுதளத்திலிருந்து அனுப்பப்படும் ராக்கெட், நீலப்பச்சை மற்றும் சிவப்பு வண்ண ரசாயனக் கலவையை வெளியிடும். பேரியம், ஸ்ட்ரோன்டியம் மற்றும் கியூப்ரிக்-ஆக்ஸைடு போன்றவற்றால் ஆனது இந்த ரசாயனக் கலவை. இந்தக் கலவை, அயனி மண்டலத்தில் வண்ணமயமான செயற்கை மேகமாக உருவாகும். இந்த ரசாயனக் கலவையால், சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது. இந்தச் செயற்கை மேகத்தில் சூரிய ஒளியினால் ஏற்படும் மாற்றங்களையும், இதன் நகர்வையும் விஞ்ஞானிகள் பூமியிலிருந்தபடியே ஆய்வுசெய்வார்கள்.

வானிலை காரணமாக இந்த ஆய்வு ஐந்து முறை திட்டமிடப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. நியூயார்க் மற்றும் நார்த் கரோலினா நகரங்களுக்கு இடைப்பட்ட அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில், இந்தச் செயற்கை மேகம் தோன்றும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க