வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (13/06/2017)

கடைசி தொடர்பு:16:54 (13/06/2017)

ஆவின் பாலில் தண்ணீர் கலந்து அதிரவைத்த வைத்தியநாதன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை!

ஆவின் பாலில் தண்ணீர் கலந்த அ.தி.மு.க பிரமுகர் வைத்தியநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Vaithiyanathan

திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதி ஆவின் பாலில் தண்ணீரைக் கலப்படம் செய்ததாக, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் வைத்தியநாதன் உள்பட 19 பேரை சிபிசிஐ போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, கடந்தாண்டு இந்த வழக்கில் ஏழு பேர்களின் பெயர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்தியநாதன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு,  நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைத்தியநாதன் உள்ளிட்டோர்மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனிடையே, வைத்தியநாதன் மீதான வழக்கை ரத்துசெய்யக்கூடாது என்று சிபிசிஐடி தரப்பில் வாதிடப்பட்டது.