Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது ஜிஎஸ்டி மசோதா!

தமிழக சட்டப்பேரவையில் இன்று, ஜிஎஸ்டி மசோதா தாக்கல்செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சர் வீரமணி இன்று சட்டப்பேரவையில் கோருகிறார். 

ஜிஎஸ்டி

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் நாளான இன்று, ஜிஎஸ்டி மசோதா தாக்கல்செய்யப்படுகிறது. வணிகவரித்துறை அமைச்சர் கேசி வீரமணி, இந்த மசோதாவைத் தாக்கல்செய்ய உள்ளார். இன்றே இந்த மசோதா, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடு முழுவதும் ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 5%, 12%, 18%, 28% என்ற நான்கு பிரிவுகளின் கீழ் வரிகள் விதிக்கப்பட உள்ளன. வரி விலக்கு உள்ள பொருள்களும் சில இருக்கின்றன. மத்திய அரசின் ஜிஎஸ்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கெடுத்து, தமிழக அரசு ஜிஎஸ்டி-யை விரைவில் தாக்கல்செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், இன்று ஜிஎஸ்டி தாக்கல்செய்யப்பட உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement